மாநில செய்திகள்

சேலத்தில் 14 வயது சிறுமி கொலை: 15 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தல் + "||" + 14-year-old girl killed in Salem

சேலத்தில் 14 வயது சிறுமி கொலை: 15 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தல்

சேலத்தில் 14 வயது சிறுமி கொலை: 15 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு, தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தல்
‘சேலத்தில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 15 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்’, என்று மாவட்ட நிர்வாகத்துக்கு, தாழ்த் தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தி இருக்கி றது.
சென்னை

‘சேலத்தில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் 15 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்’, என்று மாவட்ட நிர்வாகத்துக்கு, தாழ்த் தப்பட்டோர் ஆணையம் அறிவுறுத்தி இருக்கி றது.

இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் எல்.முருகன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிறுமி கொலை விவகாரம்

சேலம் மாவட்டத்தில் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட 14 வயது சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தினருக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கூறியுள்ளபடி இடைக்கால நிவாரணமாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 முதல் தவணை தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தற்போதைய நிலை குறித்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் ராஜலட்சுமியின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரணம் வழங்குமாறும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குமாறும் மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ், இந்த வழக்கு விசாரணை நடத்தப்படுவதால், மகளிர் நீதிமன்றத்தில் 15 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சமி நிலம் மீட்பு

இதேபோல், தேனி மாவட்டத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், தமிழ்நாட்டில் தாழ்த்தப் பட்ட வகுப்பினர் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்படுகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம் ஆகியவற்றில் இத்தகைய செயலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு இல்லை.

மாநிலத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சேலம், அரியலூர், கோவை மாவட்டங்களில் பஞ்சமி நிலம் வர்த்தக நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகளிடம் அறிவுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி னார்.