மாநில செய்திகள்

மதுக்கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல் + "||" + To reduce the liquor store opening hours Tamilisai Soundarajan Emphasis

மதுக்கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

மதுக்கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
மதுக்கடை திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் தேரடி பகுதியில் பா.ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். இதில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார்.

பின்னர் செல்போனில் ‘நமோ செயலி’ மூலம் கட்சி தொண்டர்களிடம் நிதி திரட்டினார். இதில் மாவட்ட தலைவர் பாஸ்கர், கணேசன், ஆனந்தன் உள்பட அக்கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து நிருபர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தள்ளாடியதா?

தமிழகம் தீபாவளி பண்டிகையை கொண்டாடியதா? இல்லை தள்ளாடியதா? என்று தெரியவில்லை. 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது என்றால் மனித உறுப்புகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கும் என்று டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும்.

பட்டாசு வெடிப்பதற்கு கால நிர்ணயம், மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ள தமிழக அரசு டாஸ்மாக் மது விற்பனையை வருமானத்துக் காக செய்யாமல் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும். ஏழை மக்கள் ஆடைகள், இனிப்புகள் வாங்கி பண்டிகையை கொண்டாட வேண்டிய பணம், டாஸ்மாக்கிற்கு சென்றுவிட்டது.

நேரத்தை குறைக்க வேண்டும்

மதுக்கடையை முற்றிலுமாக மூட அரசு முன்வரவேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குடிபோதை மறுவாழ்வு மையங்களை திறக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு 2 மணிநேரம் என நிர்ணயம் செய்த சுப்ரீம் கோர்ட்டு, குடிப்பதற்கும் நேரம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். மதுக்கடை திறக்கும் நேரத்தை இன்னும் குறைக்கவேண்டும். பட்டாசு வெடித்ததாக போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல்: கணிக்க முடியாது -தமிழிசை சவுந்தரராஜன்
இரண்டு ஆளுமைகளின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் தேர்தல் களத்தை கணிக்க முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
2. “பா.ஜனதாவுடன் ஸ்டாலின் பேசிவருவது உண்மை தான்” - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜனதாவுடன் பேசி வருவது உண்மைதான்“ என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
3. தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
4. அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
அம்பேத்கருக்கு முழு மரியாதை அளிப்பது மோடி அரசு தான் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
5. “தூத்துக்குடியை போராட்ட களமாகவே மு.க.ஸ்டாலின் சித்தரிக்கிறார்” தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
‘தூத்துக்குடியை போராட்ட களமாகவே மு.க.ஸ்டாலின் சித்தரிக்கிறார்‘ என்று தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார்.