மாநில செய்திகள்

‘ஆட்டிசம்’ பாதித்த குழந்தைகளுக்கான நலத்திட்டம்மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை + "||" + Court warns central health secretary

‘ஆட்டிசம்’ பாதித்த குழந்தைகளுக்கான நலத்திட்டம்மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

‘ஆட்டிசம்’ பாதித்த குழந்தைகளுக்கான நலத்திட்டம்மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை
‘ஆட்டிசம்’ உள்ளிட்ட குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கான நலத்திட்டம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்றால், மத்திய சுகாதாரத்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.
சென்னை, 

தொடர் வலிப்பு மற்றும் மூளை பாதிப்புக்குள்ளாகி படுத்த படுக்கையாக இருந்த தனது 11 வயது மகனை கருணை கொலை செய்ய அனுமதிக்க கேட்டு கடலூரைச் சேர்ந்த திருமேணி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.ராஜ மாணிக்கம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுவனின் தந்தை திருமேணி ஆஜராகி, ‘சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அனிருதா ஆஸ்பத்திரியில் தனது மகனுக்கு ‘டிரிக்கர் பாயிண்ட் தெரபி’ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையினால் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனது மகனுக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதால், இதுபோன்ற மருத்துவ முறைகளை தமிழக அரசே விளம்பரப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்’ என்றும் கூறினார்.

பாரம்பரிய மருத்துவம்

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் என்.கவிதா ராமேஸ்வர் வாதாடுகையில், ‘ஆட்டிசம், மனநலம் பாதிப்பு உள்ளிட்ட குறைபாடுகளுக்கு ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி, யுனானி போன்ற பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சை உள்ளன. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த சிகிச்சை முறைகளை வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும்‘ என்று வாதிட்டார்.

இதுபோல நாடு முழுவதும் பாதிப்புக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் நிதியுதவி வழங்கி, அவர்களை மருத்துவ ரீதியாக பாதுகாக்கவும் உள்ள திட்டங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர்.

எச்சரிக்கை

நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர், ‘இந்த வழக்கை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யாவிட்டால், மத்திய சுகாதாரத்துறைச் செயலாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்’ என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர்.