மாநில செய்திகள்

2023-ம் ஆண்டில்வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம் + "||" + In 2023 To the planet of silver Spaceship

2023-ம் ஆண்டில்வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்

2023-ம் ஆண்டில்வெள்ளி கிரகத்துக்கு விண்கலம்இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 2023-ம் ஆண்டு வெள்ளி கிரகத்துக்கு (வீனஸ்) விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டு உள்ளது.
சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

பூமியை கண்காணிப்பது, தொலையுணர்வு தகவல் களை பெறுவது, கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு மற்றும் வானிலை பயன் பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக செயற்கைகோள்களை இஸ்ரோ வடி வமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

இந்தநிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், 2023-ம் ஆண்டு மத்தியில் வெள்ளி கிரகத்துக்கு (வீனஸ்) விண்கலம் ஒன்றை அனுப்ப திட்டமிட்டு உள்ளது. 100 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், 500 வாட்ஸ் திறன் கொண்டது. இந்த விண்கலம் வெள்ளி கிரகத்தில் இருந்து குறைந்தபட்சமாக 500 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 60 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிலும் சுற்றி வரும்.

வெள்ளி குறித்து ஆய்வு செய்வதற்காக பல்வேறு விண்வெளி முகமைகள், ஆராய்ச்சிக்கூடங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் சர்வதேச விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்து உள்ளது. விண் வெளிக்கு தேவையான உபகரணங்கள், ஆய்வுகளை செய்ய விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். விண்வெளி தொடர்பான சோதனைகளை செய்வதற்காக டிசம்பர் 20-ந்தேதி வரை பல்வேறு ஆய்வு குறித்த விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.