மாநில செய்திகள்

நடிகர் சரவணனுக்கு பன்றி காய்ச்சல்சிகிச்சைக்காக சென்னை வந்தார் + "||" + Actor Saravanan swine flu

நடிகர் சரவணனுக்கு பன்றி காய்ச்சல்சிகிச்சைக்காக சென்னை வந்தார்

நடிகர் சரவணனுக்கு பன்றி காய்ச்சல்சிகிச்சைக்காக சென்னை வந்தார்
சேலத்தில் நடிகர் சரவணன் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக அவர் சென்னைக்கு புறப்பட்டு வந்தார்.
சேலம், 

பருத்திவீரன், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் சரவணன் (வயது 50). சேலத்தை சேர்ந்த இவர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.

சென்னை வந்தார்

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக நடிகர் சரவணன் நேற்று சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்தார்.

இது தொடர்பாக நடிகர் சரவணன் கூறுகையில், ‘தீபாவளி பண்டிகை அன்று எனக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது, சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தபோது, பன்றி காய்ச்சலின் முதல்கட்ட பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு காய்ச்சல் குறைந்தநிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு புறப்பட்டு செல்கிறேன்’ என்றார்.

இதனிடையே, நடிகர் சரவணனுக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றி காய்ச்சல் தடுப்பு மருந்துகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது.