டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது
x
தினத்தந்தி 11 Nov 2018 5:47 AM GMT (Updated: 11 Nov 2018 5:47 AM GMT)

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு இன்று தொடங்கியது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப்-2 தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் (ஆண்கள்-2,72,357, பெண்கள்-3,54,136, மூன்றாம் பாலினத்தவர்- 10) எழுதுகின்றனர்.  தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 268 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 248 மையங்களில் நடைபெறுகிறது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகளை கடந்த சில மாதங்களாக வேகமாக வெளியிட முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. குரூப்-4 தேர்வுக்காக 31 ஆயிரத்து 424 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டு 35 நாட்களில் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதுவே அவர்களை நேரில் அழைத்து சான்றிதழ் சரிபார்த்து இருந்தால் 157 நாட்கள் ஆகும். கணினி வாயிலாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ததினால் இது குறைந்து இருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளுக்கும்(குரூப்-1 தேர்வு தவிர) தேர்வு முடிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று இணையதளத்தில் வெளியிடப்படும்.

Next Story