குரூப் 2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருக்கும் கொடுமை! ஸ்டாலின் கண்டனம்


குரூப் 2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருக்கும் கொடுமை! ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 12 Nov 2018 9:38 AM GMT (Updated: 12 Nov 2018 9:38 AM GMT)

குரூப் 2 வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதி அடையாளத்துடன் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக குரூப்-2 தேர்வு நேற்று நடந்தது. 2 ஆயிரத்து 268 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இதில் வழங்கப்பட்ட வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு தரப்பட்ட 4 விடைகளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டிருந்தது.

காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், பெரியார் பெயர் மட்டும் சாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் குரூப் 2 வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் சாதி அடையாளத்துடன் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

குரூப்2 தேர்வு வினாத்தாளில் தந்தை பெரியாருக்கு ‘சாதிப்பட்டம்’ சூட்டப்பட்டிருக்கும் கொடுமை! கேள்வித்தாள் தயாரித்தவருக்கும், மேற்பார்வை செய்தவர்களுக்கும் முதலில் தமிழ்நாடு - ஈரோடு தெரியுமா? இதற்குக் காரணமானவர்களை பணி நீக்கம் செய்வதோடு, தமிழக அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

Next Story