மாநில செய்திகள்

பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது + "||" + Petrol price cuts 14 paise, diesel price cuts 13 paise

பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது

பெட்ரோல் விலை 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்துள்ளது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.
சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 80.56 ஆகவும், டீசல் விலை ரூ. 76.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 14 காசுகள் குறைந்து இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80.42 ஆகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, ரூ.76.30 ஆகவும் விற்பனையாகிறது. 

தொடர்ந்து  27-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைவை சந்தித்து வருகிறது. கடந்த 27 நாட்களில் பெட்ரோல் விலை ரூ. 5.68 -ம், டீசல் விலை ரூ.3.74-ம், குறைந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
2. சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனை
சென்னையில் 3வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனையாகி வருகிறது.
3. சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனை
சென்னையில் 2வது நாளாக பெட்ரோல் ரூ.74.62க்கு விற்பனையாகி வருகிறது.
4. சென்னையில் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.74.62க்கு விற்பனையாகி வருகிறது.
5. சென்னையில் பெட்ரோல் விலை 9 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை ரூ.74.69க்கு விற்பனையாகி வருகிறது.