பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 14 Nov 2018 12:53 AM GMT (Updated: 14 Nov 2018 12:53 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,


கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்று 80.42 ஆகவும், டீசல் விலை ரூ. 76.30-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது. 


Next Story