மாநில செய்திகள்

கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு + "||" + Gaja Storm: Holidays Announcement of 5 District School-Colleges

கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கஜா புயல்: 5 மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கஜா புயல் காரணமாக 5 மாவட்ட பள்ளி- கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி நாகை  மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கடாலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 

இதேபோல் புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்ட தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுவரை மொத்தம் 5 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

காரைக்கால் மாவட்ட பள்ளி-கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது கஜா புயல் 15-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும்
கஜா புயல் நகரும் வேகம் மணிக்கு 4 கிலோ மீட்டராக குறைந்தது. 15-ம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
2. சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும், சில மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு
சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.