கன்னியாகுமரி: நாகர்கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளில் கனமழை


கன்னியாகுமரி:  நாகர்கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளில் கனமழை
x
தினத்தந்தி 14 Nov 2018 3:28 PM GMT (Updated: 14 Nov 2018 3:28 PM GMT)

கன்னியாகுமரியில் நாகர்கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி,

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா புயலால் கடலோர மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  தொடர்ந்து நவம்பர் 16ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கஜா புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் தனியார் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கன்னியாகுமரியில் நாகர்கோவில், பார்வதிபுரம், சுசீந்திரம், கொட்டாரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Next Story