மாநில செய்திகள்

சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை + "||" + Heavy Rain in chennai, with the effect of Gaja storm

சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை

சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை
கஜா புயல் நெருங்குவதால் சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று (வியாழக்கிழமை) நிலப்பகுதியை நோக்கி வருகிறது. 

இந்த புயலானது பாம்பன் கடலூர் இடையே நாகை அருகே இன்று மாலை அல்லது இரவு கரையைக்கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயல் நெருங்கி வரும் நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.  திருவல்லிக்கேணி, மெரினா, அடையாறு,  ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, பாலவாக்கம் கொட்டி வாக்கம், பெசண்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்து வருகிறது.  திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


ஆசிரியரின் தேர்வுகள்...