கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு


கஜா புயல் தனியார் நிறுவன பணியாளர்கள் மாலை 4 மணிக்குள் வீடு திரும்ப வேண்டும் -தமிழக அரசு
x
தினத்தந்தி 15 Nov 2018 8:48 AM GMT (Updated: 15 Nov 2018 8:48 AM GMT)

கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

சென்னை

இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கஜா புயல் அதிதீவிர புயலாக மாறியது. கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. - நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 17 கிலோ மீட்டராக குறைந்து உள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக கடலூர் துறைமுகத்தில் 9-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 10-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. பாம்பன் துறைமுகத்தில் 8-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டு உள்ளது.

* கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

* நாகை மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

* வேடிக்கை பார்க்கவோ புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்திலோ கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு   எச்சரிக்கை விட்டு உள்ளது. 

* சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் - 044 - 25384510, 25384520, 25384530, 25384540 மற்றும் 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் புகாரை பதிவு செய்யலாம்.

Next Story