கஜா புயல்: எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை - கனிமொழி எம்.பி. பேட்டி


கஜா புயல்: எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை  -  கனிமொழி எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 16 Nov 2018 10:43 AM GMT (Updated: 16 Nov 2018 10:43 AM GMT)

கஜா புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது .தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்  பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. 

புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்குப் பாராட்டு என்று தமிழக பாரதீய ஜனதா  தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார். மேலும்  களத்தில் இயங்கிய அமைச்சர்களுக்கும் பாராட்டுகள்; பாதுகாப்புப் பணிகள் தொடர வேண்டும்  என கூறி உள்ளார்.

கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி  என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் தமிழக அரசு, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுக்கு என் பாராட்டுக்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியார்களிடம் கூறியதாவது:

கஜா புயலுக்கு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. 20 இடைத்தேர்தலும் ஜனநாயக முறையில் நடந்தால் திமுக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story