செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுகள் இனி நடைபெறாது அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு


செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 துணைத்தேர்வுகள் இனி நடைபெறாது அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2018 9:30 PM GMT (Updated: 16 Nov 2018 9:00 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் (2019-20) மார்ச்- ஏப்ரல் பருவ பொதுத்தேர்வு மற்றும் ஜூன்-ஜூலை மாதங்களில் பருவ சிறப்பு துணைத்தேர்வு ஆகிய தேர்வுகள் மட்டும் நடத்தப்படும்.

சென்னை,

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் துணைத்தேர்வுகள் இனி நடத்தப்படாது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை சமீபத்தில் ஆணை வழங்கியுள்ளது.

எனவே வரும் கல்வி ஆண்டு முதல் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 துணைத்தேர்வுகள் நடத்தப்படாது. தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச்-ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், ஜூன்-ஜூலை சிறப்பு உடனடித்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அரசாணையின்படி செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும் துணைத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களும், ஜூன்-ஜூலை பருவத்தில் நடத்தப்படும் உடனடி சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்.

மேற்கண்ட தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்து உள்ளார்.

Next Story