மாநில செய்திகள்

ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி + "||" + Between Omalur-Mecheri The largest vegetable and fruit market is set Chief Minister Palanisamy

ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி

ஓமலூர்-மேச்சேரிக்கு இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைக்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி
ஓமலூருக்கும்-மேச்சேரிக்கும் இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைத்து தரப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
சேலம் 

சேலம் மேச்சேரியில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, 920 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேச்சேரி - நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த  நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 447 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளது. 327 ஊரகக் குடியிருப்புகளில் கூட்டுகுடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேச்சேரிக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும், ரயில்வே கிராசிங்குகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டித்தரப்படும். ஓமலூருக்கும்-மேச்சேரிக்கும் இடையே மிகப்பெரிய காய்கறி, பழச்சந்தை அமைத்து தரப்படும். மேச்சேரியில் அதிக அளவில் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதால், குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும். பழங்கள் வீணாகாமல் தடுக்க குளிர்பதன கிடங்கு அமைத்துத் தரப்படும். சொட்டு நீர் பாசனம், வேளாண் கருவிகளுக்கு அரசு மானிய உதவிகள் வழங்குகிறது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர்
புயல் பாதித்த மாவட்டங்களை இயற்கைப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பது குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2. 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை அதிமுக சந்திக்கும்; அனைத்திலும் வெற்றி பெறும் - முதல்வர் பழனிசாமி
20 தொகுதிகளில் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தால் அதிமுக சந்திக்கும். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
3. அ.தி.மு.க. ஆட்சியை எதுவும் செய்ய முடியாது: தி.மு.க.வின் கனவு கானல் நீராகிவிடும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. ஆட்சியை எதுவும் செய்ய முடியாது, தி.மு.க.வின் கனவு கானல் நீராகிவிடும் என்று உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. இடைத்தேர்தலில் பெறப்போகும் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
“திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பெறப்போகும் வெற்றி அடுத்துவரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்“ என்று மதுரையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
5. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது உறுதி” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.