மாநில செய்திகள்

புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி தி.மு.க அறிவிப்பு + "||" + Storm relief work On behalf of DMK Foundation Rs. 1 crore finance DMK announcement

புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி தி.மு.க அறிவிப்பு

புயல் நிவாரண பணிகளுக்காக  தி.மு.க அறக்கட்டளை  சார்பில் ரூ. 1 கோடி நிதி தி.மு.க அறிவிப்பு
புயல் நிவாரண பணிகளுக்காக தி.மு.க அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி ,எம்.பி- எம்.எல்.ஏ.களின் ஒருமாத சம்பளமும் வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
சென்னை

கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.புயலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதேபோல் உயிர் இழந்த மாடுகளுக்கு தலா ரூ.30 ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

புயலால் பாதிக்கபட்ட பகுதிகளை தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டு  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். 

தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடி நிதி என அறிவிக்கபட்டு உள்ளது. நிவாரண நிதியாக திமுக எம்எல்ஏக்கள்,  எம்.பி.க்கள் தங்கள் 1 மாத சம்பளமும் அளிக்கப்படும்  என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்து உள்ளது. 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8மாவட்ட மக்களுக்கு உறுதுணையாய் இருக்க வேண்டியது நம் பொறுப்பு!  

அந்த அடிப்படையில் மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்புப் பணிகளுக்கு உதவிட, கழகத்தின் சார்பில் 1கோடி ரூபாயும், எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களின் க்களின் ஒருமாத சம்பளமும் நிதியுதவியாக அளிக்கப்படும்! என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. பொங்கல் பரிசு கணக்கில் தவறு : சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு
பொங்கல் பரிசு வழங்கியது தொடர்பாக துணை முதல்வர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
2. கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு; அரசாணை வெளியீடு
கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
3. கஜா புயல்: நிவாரணம் கோரி திருவாரூரில் சாலை மறியல்; 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கிட கோரி திருவாரூர் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
4. ‘அடுத்து வரும் தேர்தல்களில் தி.மு.க.வுக்கு வெற்றி உறுதி’ மு.க.ஸ்டாலின் பேச்சு
அடுத்து வர இருக்கின்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதி என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. செங்கல்பட்டு திருத்தேரியில் சாலை, குடிநீர் வசதி கேட்டு தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு
செங்கல்பட்டு திருத்தேரியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...