அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை - டீன் விளக்கம்


அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை - டீன் விளக்கம்
x
தினத்தந்தி 20 Nov 2018 5:45 AM GMT (Updated: 20 Nov 2018 5:45 AM GMT)

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை என மருத்துவமனை டீன் அசோகன் விளக்கம் அளித்து உள்ளார்.

கோவை,

கோவை அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் பெயர், முகவரி தெரியாததால், பிணவறைக்கு கொண்டு செல்லாமல், வார்டிலேயே மருத்துவமனை ஊழியர்கள் அந்த உடலை வைத்து இருந்தனர். அப்போது இறந்த பெண்ணின் சடலத்தை பூனை கடித்து உள்ளது.  இது தொடர்பான  காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி, எலி, பூனைகள் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில்  இறந்தவரின் உடலை பூனை கடிக்கவில்லை. இறந்தவரின் உடலை பூனை கடித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. இறந்தவரின் உடலை பூனை கடித்ததாக வெளியான தகவல் குறித்து டீன் அசோகன் விளக்கம் அளித்து உள்ளார்.

Next Story