கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரூ. 40 லட்சம் நிதியுதவி


கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரூ. 40 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 20 Nov 2018 10:53 AM GMT (Updated: 20 Nov 2018 10:53 AM GMT)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் ரூ. 40 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

சென்னை,

நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரையுலகினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். 

நடிகர் விஜய்  7 மாவட்ட மக்களுக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். மக்கள் இயக்கம் மூலமாக நிதியுதவியை வழங்கியுள்ளார். மாவட்ட நிர்வாகிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 40 லட்சம் செலுத்தப்பட்டு நிவாரணப்பணி மேற்கொள்ள நடிகர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். 


Next Story