கஜா புயல்; அரசு மேற்கொள்ளும் நிவாரண பணிகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும்: நீதிபதிகள்


கஜா புயல்; அரசு மேற்கொள்ளும் நிவாரண பணிகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும்:   நீதிபதிகள்
x
தினத்தந்தி 20 Nov 2018 12:38 PM GMT (Updated: 20 Nov 2018 12:38 PM GMT)

கஜா புயல் அரசு மேற்கொள்ளும் நிவாரண பணிகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.

இந்த புயல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

கஜா புயல் பாதிப்பு பற்றி தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப்பணி மேற்கொள்ள தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர்.

அதன்பின் நீதிபதிகள், கஜா புயல் நிவாரண பணிகளுக்காக ரூ.1,000 கோடியை முதல் அமைச்சர் ஒதுக்கியுள்ளார் என வெளியான செய்தியை படித்தோம்.

கஜா புயலால் பாதித்த பகுதிகளில் அரசு மேற்கொள்ளும் நிவாரண பணிகளை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும். 

நிவாரண பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என கண்காணித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Next Story