மாநில செய்திகள்

இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் + "||" + Rain will continue another 3 days

இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்
இன்னும் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:- 
வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால், அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும், கடந்த, 24 மணி நேரத்தில், கடலோர பகுதிகளில் பரவலாகவும், உள் பகுதிகளில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. 

அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், வட தமிழகம்,புதுச்சேரியில் பரவலாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும். மீனவர்கள் இன்று தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா கடலுக்கு செல்ல வேண்டாம்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பிடிபட்ட ரவுடி பினுவிடம் அதிரடி விசாரணை
சென்னையில் பிடிபட்ட பிரபல ரவுடி பினுவிடம் போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கையாக 750 பேர் கைது
நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3. திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு என அறிவிப்பு
திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
4. சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது
சென்னையில் வருகிற 23-ந் தேதி நடைபெறும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனைக்கு அமோக வரவேற்பு இருந்தது. நேற்று ஒரே நாளில் எல்லா டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது.
5. சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி விவசாயி கைது
சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.