கனமழை எதிரொலி: புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் தேர்வுகள் தள்ளிவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு


கனமழை எதிரொலி: புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் தேர்வுகள் தள்ளிவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 5:34 PM GMT (Updated: 21 Nov 2018 5:34 PM GMT)

கனமழை எதிரொலி காரணமாக, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களாக அதன் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை தள்ளி வைத்தது.

இந்த நிலையில் புதுக்கோட்டை, நாகை, திருவாரூரில் உள்ள கல்லூரிகளில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ள தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தள்ளி வைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் இணைப்பு கல்லூரிகளில் வழக்கமான அட்டவணைப்படி 22-ந் தேதி தேர்வுகள் நடக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Next Story