கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்


கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதம்
x
தினத்தந்தி 22 Nov 2018 2:48 AM GMT (Updated: 22 Nov 2018 2:48 AM GMT)

கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூர் வரும் ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வருகின்றன.

சென்னை,

சென்னை கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து எழும்பூருக்கு வரக்கூடிய மன்னார்குடி, கன்னியாகுமரி, காரைக்கால், ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் 2 மணி நேரம் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

Next Story