தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்


தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம் - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 24 Nov 2018 8:18 AM GMT (Updated: 24 Nov 2018 8:18 AM GMT)

தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என நம்புகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் ரூ.55லட்சம் மதிப்புள்ள நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்த பின் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சேத விவரங்களை தமிழக அரசு சரியாக மதிப்பீடு செய்துள்ளது. கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை குறித்து மத்திய குழுவிடம் விளக்கி கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ரூ 55 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் மேற்கொண்ட முயற்சியால் மத்தியக்குழு தமிழகம் வந்துள்ளதை பாராட்ட வேண்டும். தமிழக அரசு கேட்ட புயல் நிவாரண நிதியை மத்திய அரசு அளிக்கும் என நம்பிக்கை உள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது.

அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ஹெலிகாப்டர் ஆய்வு செய்ததை தூரத்து பார்வை என கமல் விமர்சித்தற்கு பதில் அளித்த ஜெயக்குமார், 
கமல் இன்னும் குழந்தையாகவே களத்தூர் கண்ணம்மா படத்தில் உள்ளது போல் இருக்கிறார். 

சட்டசபையில் அரசியல் செய்யுங்கள், புயல் பாதித்த 12 மாவட்டங்களில் செய்யாதீர்கள். ஏற்கனவே நிகழ்ந்த பேரிடர்கள் கற்று கொடுத்த அனுபவத்தின் அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story