மாநில செய்திகள்

நவ.30 மற்றும் டிச.1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் + "||" + Heavy rain expected on nov 30

நவ.30 மற்றும் டிச.1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

நவ.30 மற்றும் டிச.1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு :  வானிலை ஆய்வு மையம்
வரும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
சென்னை,

வங்க கடலில் உருவான கஜா புயல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி அரபிக் கடலுக்கு சென்று விட்டது.
அதன் பிறகு தமிழகத்தின் மேல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்தது. 

மழை படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகம்-புதுவையில் வறண்ட வானிலை நிலவுகிறது. இது மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வருகிற  30-ந்தேதியும், டிசம்பர் 1-தேதியும்   தமிழக கடலோர பகுதிகளில் சில இடங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக   இந்திய வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.
2. குடிநீர் லாரி உரிமையாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து தண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது.
3. சென்னை உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
4. புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்
புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.
5. சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ரூ.33 லட்சம் தங்கம் கடத்தல்
சார்ஜாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ரூ.33 லட்சம் தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.