பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது


பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது
x
தினத்தந்தி 29 Nov 2018 1:05 AM GMT (Updated: 29 Nov 2018 1:05 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகள் குறைந்து ரூ. 76.01 -க்கு விற்பனையாகிறது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்கத்  தொடங்கியது. கடந்த மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 53 காசுகள் குறைந்து  ரூ.76.35 விற்பனையானது. டீசல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.72.34 ஆகவிற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 34 காசுகளும், டீசல்  விலை லிட்டருக்கு  39 காசுகளும் குறைந்துள்ளன. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.01- க்கும்,  டீசல் ரூ.71.95 ஆகவும் விற்பனையாகிறது. 


Next Story