யாரும் உதவ முன்வரவில்லை வாலிபரின் கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள் ஐதராபாத்தில் பரிதாபம்


யாரும் உதவ முன்வரவில்லை வாலிபரின் கொலையை செல்போனில் படம் பிடித்த மக்கள் ஐதராபாத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:24 PM GMT (Updated: 29 Nov 2018 10:24 PM GMT)

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே நேற்று முன்தினம் மாலையில் ஒரு ஆட்டோ டிரைவர், வாலிபர் ஒருவருடன் சாலையில் தகராறில் ஈடுபட்டார்.

ஐதராபாத், 

தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் அருகே நேற்று முன்தினம் மாலையில் ஒரு ஆட்டோ டிரைவர், வாலிபர் ஒருவருடன் சாலையில் தகராறில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த வாலிபரை சரமாரியாக குத்தி கொன்றார்.

இந்த சம்பவம் நடந்த போது ஏராளமான பொதுமக்கள் அங்கு நின்றிருந்தனர். ஆனால் யாரும் இந்த சம்பவத்தை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. மாறாக தங்கள் கைகளில் இருந்த செல்போனில் இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து கொண்டனர். ஒரேயொரு போக்குவரத்து போலீஸ்காரர் மட்டும் அந்த ஆட்டோ டிரைவரை தடுக்க முயன்றார்.

ஆனால் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கத்திக் குத்து பட்ட அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அந்த ஆட்டோ டிரைவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவரது பெயர் காஜா (வயது30) என்றும் உயிரிழந்தவர் குரேஷி (35) என்றும் தெரியவந்தது.

அவர்களுக்கு இடையே ஆட்டோ கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கள் கண்முன்னே நடந்த கொலையை தடுக்க முன்வராமல், செல்போனில் படம் பிடித்த பொதுமக்களின் செயல் ஐதராபாத் வாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story