நிவாரண பொருட்கள் வழங்கிய தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் நன்றி
நிவாரண பொருட்கள் வழங்கிய தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் நன்றி
சென்னை,
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. சார்பில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஒரு கோடி ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி, அவர்களுடைய துயரில் பங்கேற்று ஆறுதல் தெரிவித்திருக்கிறோம்.
மேலும், ‘கஜா’ புயலுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மாவட்ட செயலாளர்களும், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story