தேர்தலுக்காக அல்ல, லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா.; ஜி.கே.வாசன்
தேர்தலுக்காக அல்ல, லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா. என ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
அரியலூர்,
த.மா.கா.வின் 5ஆம் ஆண்டு தொடக்க விழா அரியலூரில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய ஜி.கே.வாசன், தேர்தலுக்காக தொடங்கப்பட்ட கட்சி அல்ல த.மா.கா., லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும். தமிழகத்தில் த.மா.கா. கட்சியில் மட்டுமே இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.
கஜா புயலால் தமிழக கடலோர பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் துயரத்தில் உள்ளனர். அவர்களின் துயரம் துடைக்கப்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் கடந்த 15 நாட்களாக மக்கள் இருட்டில் பயந்து வாழ்க்கையை நடத்துகின்றனர் என பேசினார்.
தொடர்ந்து அவர், கஜா புயலுக்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையில் பாதியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். தாமதிக்கப்பட்டு வழங்கப்படும் உதவிப்பொருட்கள், உதவி மறுக்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
Related Tags :
Next Story