பயிற்சி துணை கலெக்டர்கள் கஜா புயல் நிவாரண பணிகளில் நியமனம் தமிழக அரசு உத்தரவு

பயிற்சி துணை கலெக்டர்கள் கஜா புயல் நிவாரண பணிகளில் நியமனம் தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 1 Dec 2018 5:07 PM GMT (Updated: 2018-12-01T22:37:54+05:30)

2014–2015–ம் ஆண்டு பிரிவில் உள்ள துணைக் கலெக்டர்கள் 13 பேர், சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் இரண்டாம் கட்டமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

சென்னை, 

2014–2015–ம் ஆண்டு பிரிவில் உள்ள துணைக் கலெக்டர்கள் 13 பேர், சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தில் இரண்டாம் கட்டமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.

தற்போது இவர்களை கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகளுக்காக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஏ.என்.லாவண்யா, கே.சாய்வர்த்தினி, கே.காயத்திரி சுப்பிரமணி, எஸ்.கணேஷ், எம்.சேக் மன்சூர் ஆகியோர் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும்; என்.பிரீத்தி பார்கவி, பி.மணிராஜ், எம்.ஸ்ரீதேவி ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கும்; டி.தனப்பிரியா, எஸ்.லட்சுமிபிரியா, பி.ஜெகதீஸ்வரன் ஆகியோர் திருவாரூர் மாவட்டத்துக்கும்; ஏ.வி.சுரேந்திரன், எம்.முத்துகழுவன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும் கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Next Story