தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி காலமானார்


தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி காலமானார்
x
தினத்தந்தி 2 Dec 2018 12:57 PM IST (Updated: 2 Dec 2018 12:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71.

சென்னை,

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்டு 2016ல் முத்துக்குமாரசாமி பதவியேற்றார்.  அதன்பின்னர் உடல் நலகுறைவால் அந்த பதவியை 2017 ஆகஸ்டில் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 1994ல் தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியவர். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

27 ஆண்டுகளுக்கு மேலாக ராஜீவ் கொலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கலாம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பரிந்துரைகளை அரசுக்கு அளித்தவர் முத்துக்குமாரசாமி.

இந்த நிலையில், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரான முத்துகுமாரசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Next Story