இன்னும் ஒரு வார காலத்துக்குள் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கும் - அமைச்சர் தங்கமணி
இன்னும் ஒரு வார காலத்துக்குள் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் தங்கமணி கூறியிருப்பதாவது:
மின்சீரமைப்பு பணிகளில் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நகர் பகுதிகளில் 100%, கிராம பகுதிகளில் 50%க்கு மேல் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் முழுமையாக மின் இணைப்பு கிடைக்கும், அதன் பிறகு தான் நாங்கள் ஊரை விட்டு செல்வோம்.
நாளை முதல் கூடுதலாக மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபடுவர். இதுவரை 88,000 மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளது, அவை அனைத்தும் தரமாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story