புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் ரத்து? அமைச்சர் தங்கமணி பேட்டி
புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்-அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
சென்னை,
அமைச்சர் தங்கமணி புதுக்கோட்டையில் செய்தியார்களிடம் கூறியதாவது:
புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக முதல்-அமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புயல் பாதித்த பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின்விநியோகம் வழங்கப்படும். மின் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க முடியாவிட்டாலும், அவர்களின் கூலியை உயர்த்துவது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story