பிரசவத்தின்போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்த அரசு டாக்டர்
திருவாரூரில் பிரசவ அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அருகே தைக்கால் காலனித் தெருவை சோ்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஆனந்தராஜ் என்பவர், தனது மனைவி கார்த்திகாவின் இரண்டாவது பிரசவத்திற்காக திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற கார்த்திகா, வீடு திரும்பிய பிறகும் தொடர்ந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவரது பிரசவத்தின்போது, தவறுதலாக வயிற்றுக்குள் கையுறை வைத்து தைத்தது தெரிய வந்துள்ளது.
அதன்பின்னர், அறுவை சிகிச்சை மூலம் கையுறை அகற்றப்பட்டது. எனினும், தற்போது கார்த்திகா மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கார்த்திகாவின் கணவர் ஆனந்தராஜ் புகார் மனு அளித்துள்ளார்.
Related Tags :
Next Story