கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பரில் நடைபெறும்


கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பரில் நடைபெறும்
x
தினத்தந்தி 3 Dec 2018 3:02 PM GMT (Updated: 2018-12-03T20:32:27+05:30)

கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பரில் நடைபெறும்.

புதுச்சேரி,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி ‘கஜா’ புயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றது.

இந்த புயலில் லட்சக்கணக்கான தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் சாய்ந்தன.  பொதுமக்கள் பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு வேண்டிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த புயலானது தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் பாதிப்பினை ஏற்படுத்தியது.  குறிப்பிடும்படியாக காரைக்காலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  இந்த நிலையில், கஜா புயலால் நவம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்த தேர்வுகள் டிசம்பர் 13,14,15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Next Story