தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்


தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு  மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
x
தினத்தந்தி 4 Dec 2018 1:17 PM IST (Updated: 4 Dec 2018 1:17 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்  நிருபர்களிடம் கூறியதாவது:

குமரி கடல் முதல், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி வரை, தமிழக கடற்கரை பகுதியையொட்டி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. 

அடுத்த 2 தினங்களில் தமிழகத்தின் அனேக இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். 

பொன்னேரி 13, சோழவரம் 8, கேளம்பாக்கம் 7, ரெட்ஹில்ஸ், காரைக்கால் 5, ஆலங்குடி, பரங்கிப்பேட்டை, தாமரைபாக்கம், தரங்கம்பாடி, மகாபலிபுரம், அதிராமபட்டினத்தில் 3 செ.மீ., மழை பெய்துள்ளது. 

Next Story