ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவக்குமாரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரி கேள்வி
ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவக்குமாரிடம் ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார்.
சென்னை,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த விசாரணைக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் முரளிதர், ராஜ கோபால், பார்வதி பத்மநாபன் ஆகியோர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.இருவரும் தோல் சிகிச்சை நிபுணர்கள் ஆவார்கள். இன்று காலை 10.30 மணியளவில் விசாரணை ஆணையத்துக்கு இருவரும் வந்தனர். இதுபோல் ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவக்குமாரும் இன்று ஆஜரானார்.
நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சைகள் பற்றி தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் தனி மருத்துவர் சிவக்குமாரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.
ஜெயலலிதா பிழைத்து வந்திருந்து, ஏன் சிகிச்சைக்கு வெளிநாட்டுக்கு அழைத்து செல்லவில்லை என்று கேட்டிருந்தால் என்ன பதில் கூறுவீர்கள்? உங்களை நம்பி இத்தனை ஆண்டுகள் மருத்துவராக வைத்திருந்த ஜெயலலிதா, நீங்கள் கூட ஏன் உதவவில்லை என்று கேட்டிருந்தால் என்ன பதில் கூறுவீர்கள் என கேள்வி எழுப்பினார்.
Related Tags :
Next Story