மாநில செய்திகள்

ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது; ஆறுமுகசாமி ஆணையம் + "||" + Controversial opinions about Arumugamy Commission, Jayalalithaa's death should not be issued; Arumugamasi Commission

ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது; ஆறுமுகசாமி ஆணையம்

ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது; ஆறுமுகசாமி ஆணையம்
ஆறுமுகசாமி ஆணையம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சரின் நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது.  அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என எழுந்த சர்ச்சையை அடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமி‌ஷன் விசாரணை நடத்தி வருகிறது.  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரையும் அழைத்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவு நாளையொட்டி, தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.  அதில், ஆறுமுகசாமி ஆணையம் தொடர்பாகவோ, ஜெயலலிதா மரணம் தொடர்பாகவோ சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடக்கூடாது என தெரிவித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...