மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது - மு.க. ஸ்டாலின்


மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 5 Dec 2018 10:41 AM IST (Updated: 5 Dec 2018 10:41 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னை,

மேகதாது குறுக்கே புதிய அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருவது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் ப.தனபாலை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கான அனுமதி வேண்டி கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நேற்று சபாநாயகர் ப.தனபால் கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதை ஏற்றுக் கொண்டு தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டத்தை நடத்துவதற்கான தேதி மற்றும் நேரத்தை குறித்து அறிவிப்பு ஆணை ஒன்றை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு வெளியிட்டார்.

இந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் ஒன்றை கொண்டுவர இருக்கிறார்.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. சட்டமன்ற கூட்டத்தில் அரசு சார்பில் வைக்கப்படும் தீர்மானங்களை வைத்து தி.மு.க.வின் கருத்துக்கள் கூறப்படும். இடைத்தேர்தல் எப்போது வந்தாலும்  சந்திக்க தி.மு.க தயார் என மு.க. ஸ்டாலின் கூறினார். 

Next Story