தமிழகத்தில் 2 நகராட்சி கமிஷனர்கள் அதிரடி சஸ்பெண்டு அரசு நடவடிக்கை


தமிழகத்தில் 2 நகராட்சி கமிஷனர்கள் அதிரடி சஸ்பெண்டு அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Dec 2018 11:15 PM GMT (Updated: 5 Dec 2018 9:14 PM GMT)

தமிழகத்தில் 2 நகராட்சி கமிஷனர்களை அதிரடியாக சஸ்பெண்டு செய்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

ஊட்டியில் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்தவர் சர்தார். அப்போது அங்கு மேலாளராக பார்வதி பணிபுரிந்தார். அந்த சமயத்தில் கட்டிட அனுமதி, வரைபட அனுமதி போன்றவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் சென்றன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை விரிவான விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அனுப்பியது. சர்தார் மற்றும் பார்வதி மீது நடவடிக்கை எடுக்க அரசும் உத்தரவிட்டது.

சஸ்பெண்டு

சர்தார், தற்போது காஞ்சீபுரம் சிறப்பு நிலை நகராட்சி கமிஷனராக பணிபுரிகிறார். பார்வதி, கூடலூர் 2-ம் நிலை நகராட்சி கமிஷனராக பணியாற்றுகிறார்.

இந்தநிலையில் சர்தார் மற்றும் பார்வதி ஆகிய இருவரையும் சஸ்பெண்டு செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஒரே நேரத்தில் 2 நகராட்சி கமிஷனர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்புக்கு, செயற்பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story