மாநில செய்திகள்

சோவிடம் ஜெயலலிதா வாங்கிய சத்தியம்தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் புதிய தகவல்கள் + "||" + Jayalalithaa's promise to cho

சோவிடம் ஜெயலலிதா வாங்கிய சத்தியம்தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் புதிய தகவல்கள்

சோவிடம் ஜெயலலிதா வாங்கிய சத்தியம்தந்தி டி.வி.யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் புதிய தகவல்கள்
தந்தி டி.வி.யில் கடந்த திங்கட்கிழமை முதல் ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ என்ற புதிய தொடரில், ஜெயலலிதா பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத பல அரிய தகவல்கள் இடம் பெற்று உள்ளன. வருகிற வெள்ளிக்கிழமை வரை தினமும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் 3-வது நாளான நேற்று ஜெயலலிதாவின் சொந்த ஊர் எது? அவரது தந்தையின் மர்ம மரணம், ஜெயலலிதா பெங்களூருவில் வளர்ந்த நாட்களில் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சுவாரஸ்யங்கள் போன்ற அபூர்வ தகவல்கள் இடம்பெற்றன.

ஜெயலலிதாவின் அதிகம் பேசப்படாத நெருங்கிய நட்புறவுகள், உலகம் அறிந்த நட்புகளின் அறியாத பக்கங்களை வெளிக்கொண்டு வருகிறது இன்று (வியாழக்கிழமை) இரவு 9 மணிக்கு தந்தி டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ நிகழ்ச்சி.

ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்ததா? குழந்தை சர்ச்சை உருவாக காரணம் என்ன? என்பது குறித்து ஜெயலலிதாவுடன் வாழ்ந்தவர்கள், நெருங்கிப் பழகியவர்கள் முதன் முறையாக மனம் திறக்கிறார்கள்.

சசிகலா-ஜெயலலிதா அறிமுகமானது எப்படி? அறிமுகம் செய்தவர் யார்? ஜெயலலிதா எதனால், எப்படி போயஸ் தோட்டத்தில் குடியேறினார்? 1996-ம் ஆண்டு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது நடந்த வெளிவராத சம்பவங்கள், திருமணம், குடும்பம் என சராசரி வாழ்க்கைக்கு ஜெயலலிதா ஆசைப்பட்டது, அவர் புடவை விற்ற சம்பவம், போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதாவுடன் வாழ்ந்த அவரது கடைசி உறவினர் பற்றிய தகவல்கள், சுதாகரனை ஏன் வளர்ப்பு மகனாக்கிக் கொண்டார்? சசிகலாவை ஜெயலலிதா இரு முறை நீக்கியது ஏன்? எழுத்தாளர் சோவிடம் ஜெயலலிதா வாங்கிய கடைசி சத்தியம் உள்ளிட்ட இதுவரை வெளிவராத அரிய தகவல்கள் இந்த நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு மறுஒளிபரப்பு ஆகிறது.