மாநில செய்திகள்

டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையேயான10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் + "||" + 10 km Metro rail test run away

டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையேயான10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்

டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையேயான10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம்
டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் முன்னிலையில் நேற்று நடந்தது.
சென்னை,

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது தான் மெட்ரோ ரெயில் சேவை. ஆரம்பத்தில் கோயம்பேடு-ஆலந்தூர் இடையே முதல்கட்ட ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை விமானநிலையம்-சின்னமலை, பரங்கிமலை-சென்னை சென்டிரல், விமானநிலையம்-சென்டிரல், சின்னமலை-டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சொகுசான பயணத்துக்கு ஏற்ற மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இப்படியாக பயன்பாட்டில் இருக்கும் மெட்ரோ ரெயில் சேவை மேலும் நீட்டிக்கப்படுவதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

சோதனை ஓட்டம்

அதன் ஒரு பகுதி தான் டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையேயான 10 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், சென்டிரல், ஐகோர்ட்டு, மண்ணடி, வண்ணாரப்பேட்டை ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வருகின்றன.

இந்த பாதையும் செயல்பட தொடங்கினால் ஓரளவு சென்னையின் முக்கிய வழித்தடங்களை இது இணைப்பதாக இருக்கும். டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையே ரெயில் நிலைய கட்டுமான பணிகள், சுரங்கப்பாதை மற்றும் தண்டவாளம் மற்றும் மின்சாரம் ஆகிய பணிகள் நிறைவடைந்துவிட்டன.

கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி இந்த பாதையில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் முதல் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் பார்வையிட்டார்

இந்த சோதனை ஓட்டத்தையும், மெட்ரோ ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகளையும் தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல், திட்ட இயக்குனர்கள், இயக்கம் மற்றும் அமைப்புகளின் இயக்குனர்களும் உடன் இருந்தனர்.

சோதனை ஓட்டத்துக்காக தயாராக இருந்த ரெயிலில் அமைச்சர் எம்.சி.சம்பத் ஏறி, அதில் பயணமும் செய்தார். சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சிக்னல் அமைக்கும் பணிகள் மீதம் இருப்பதாகவும், அந்த பணிகள் நிறைவடைந்ததும் பாதுகாப்பு கமிஷனர் வருகைக்கு அறிக்கை அனுப்ப இருப்பதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்பு கமிஷனர் வந்து ஆய்வு செய்த பின்பு, அவர் கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து டி.எம்.எஸ்.-வண்ணாரப்பேட்டை இடையேயான மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இன்னும் சில மாதங்களில் அதை எதிர்பார்க்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை