மாநில செய்திகள்

இலங்கை கடற்படையால்நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு + "||" + Sri Lanka Navy Rameswaram fishermen

இலங்கை கடற்படையால்நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்படையால்நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்,

ராமேசுவரத்தில் இருந்து 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டி கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தனர்.

மேலும் ஒரு சில படகுகளை சுற்றி வளைத்து மீனவர்களை தாக்கியதாகவும், மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தி விரட்டியடித்ததாகவும் தெரியவருகிறது.

அதனை தொடர்ந்து மீன்பிடிப்பதை பாதியிலேயே மீனவர்கள் கைவிட்டு உடனடியாக கரைக்கு திரும்பினர். இந்த நிலையில் இறால் மீன்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது. கேரளாவை சேர்ந்த இறால் கொள்முதல் கம்பெனிகள் வழக்கமாக ஒரு கிலோ இறால் ரூ.700-க்கு கொள்முதல் செய்வது வழக்கம். நேற்று ஒரு கிலோ இறால் ரூ.500-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.

கவலை

இதனால் படகு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பு, இறால் மீன்களின் விலை வீழ்ச்சி காரணமாக படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.