தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘கொடிநாள்’ நன்கொடை


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘கொடிநாள்’ நன்கொடை
x
தினத்தந்தி 7 Dec 2018 9:45 PM GMT (Updated: 7 Dec 2018 8:29 PM GMT)

முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ந் தேதி கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

சென்னை,

தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நமது தாய்த் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ந் தேதி கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

இந்த சமூகக் கடமையை நிறைவேற்றிடும் பொருட்டு கொடிநாள் அன்று கொடி விற்பனை மூலமும், நன்கொடை மூலமும் திரட்டப்படும் நிதி, முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்விற்கும், உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும், முன்னாள் படை வீரர்களின் மேம்பாட்டிற்காகவும் செலவிடப்படுகிறது.

முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் இந்த ‘கொடி நாளை’ முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தன்னை நேற்று நேரில் சந்தித்த சென்னை முப்படை நலச்சங்கத்தைச் சேர்ந்த எஸ்.மனோகரனிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ‘கொடி நாள்’ நன்கொடை அளித்தார். அவருடன் கட்சியின் முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலுவும் நன்கொடை அளித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story