மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு + "||" + Jayalalithaa's Boise Garden house Change as a memorial home The area is civilian Opposition

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
சென்னை,

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம், நினைவிடமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஜெயலலிதாவின் இல்லம் நினைவிடமாக மாற்றும்  பணிகள் நடந்து வருகின்றன.  நினைவு இல்லம் அமைப்பதால் ஏற்பட வாய்ப்புள்ள இடையூறுகளுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பது குறித்து சுற்றுவட்டார மக்களிடம் கருத்துக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யும் பணியில் சமூகப்பணி கல்லூரி ஈடுபட்டுள்ளது.

அறிக்கையை வரும் 15-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து போயஸ் தோட்டத்தை சுற்றி நோட்டீஸ் ஒட்டப்பட்டு இந்த கூட்டத்திற்கு மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் தேனாம்பேட்டையில் உள்ள சமூக நலக் கூடத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தயார் செய்யப்பட்ட கேள்வித்தாள்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பதில் பெற்றும் அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்றினால் அங்கு வரும் மக்களால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும். அதனால் வேறு இடத்திற்கு மாற்றலாம் என பொதுமக்கள் கூறினர்.