மாநில செய்திகள்

விபத்தில் மகன் சாவு:2 இடங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு வாங்கிய பெற்றோர்நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Death of son in accident: Continue the case in 2 places Parents received compensation

விபத்தில் மகன் சாவு:2 இடங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு வாங்கிய பெற்றோர்நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

விபத்தில் மகன் சாவு:2 இடங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு வாங்கிய பெற்றோர்நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
விபத்தில் மகன் பலியானதற்காக 2 வழக்குகளை தொடர்ந்து 2 இடங்களில் இழப்பீடுகளை பெற்ற பெற்றோரை வருகிற 17-ந் தேதி நேரில் ஆஜராகும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

நாமக்கல் மாவட்டம் கரட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் லாரி டிரைவர் சரவணன். இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 13-ந் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே லாரியை ஓட்டிச் சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் பலியானார்.

இதையடுத்து, சரவணனின் பெற்றோர் மாரிமுத்து, மணிமேகலை, நீலகிரி மாவட்ட தொழிலாளர் இழப்பீட்டு ஆணையரிடம் இழப்பீடு கேட்டு மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஆணையர், ரூ.8 லட்சத்து 20 ஆயிரத்தை இழப்பீடு வழங்குமாறு லாரி இன்சூரன்ஸ் செய்யப்பட்ட நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு

அதேபோல, பவானியில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயத்தில் இழப்பீடு கேட்டு மாரிமுத்துவும், மணிமேகலையும் மற்றொரு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு லோக் அதாலத் என்ற மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒரே வழக்கில் இரண்டு இழப்பீடு வழங்கப்பட்ட விவரம் தெரிய வர, நீலகிரி மாவட்ட தொழிலாளர் இழப்பீட்டு ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் விசாரித்தார்.

போலீஸ் விசாரணை

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஒரே விபத்து வழக்கில் இரண்டு இழப்பீடுகள் பெறப்பட்டுள்ளன. எனவே, இது குறித்து விசாரணை நடத்த ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டை, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நியமிக்கவேண்டும். அந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தன்னுடைய விசாரணை அறிக்கையை வருகிற 17-ந் தேதி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். மேலும், இரண்டு வழக்குகளை தொடர்ந்து, இழப்பீடுகளைக் பெற்ற சரவணனின் பெற்றோரும் 17-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை