மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நடந்தலோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகளில் சுமுக தீர்வுரூ.284 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது + "||" + All across Tamilnadu In the Lok Aadalat Amicable settlement of 86 thousand cases

தமிழகம் முழுவதும் நடந்தலோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகளில் சுமுக தீர்வுரூ.284 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது

தமிழகம் முழுவதும் நடந்தலோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகளில் சுமுக தீர்வுரூ.284 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட்டது
தமிழகத்தில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 86 ஆயிரம் வழக்குகள் சுமுக முடிவுக்கு வந்தன.
சென்னை,

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுகிறது. இந்த லோக் அதாலத் தேசிய அளவில் ஆண்டுக்கு ஒரு முறையும், மாநில அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்படுகின்றன.

இதில் காசோலை மோசடி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து உள்பட 11 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது முழு சம்மதத்துடன் வழக்கு சுமுக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது.

ஐகோர்ட்டு நீதிபதிகள்

தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு நேற்று ‘லோக் அதாலத்’ என்ற மக்கள் மன்றத்தை நடத்தியது. இதுகுறித்து மாநில சட்டப்பணி ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் நீதிபதி ஏ.நஷீர்அகமது கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.கிருஷ்ணகுமார், எம்.கோவிந்தராஜ், பவானி சுப்பராயன், அப்துல்குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், சுப்பிரமணியம் பிரசாத், என்.ஆனந்த்வெங்கடேஷ், சி.சரவணன் ஆகியோர் தலைமையில் 10 அமர்வுகள் அமைக்கப்பட்டன.

ஐகோர்ட்டு மதுரை கிளையில் மூத்த நீதிபதி எஸ்.விமலா, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜெ.நிஷா பானு, டி.கிருஷ்ணவள்ளி, என்.நிர்மல்குமார், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 6 அமர்வுகள் அமைக்கப்பட்டன.

ரூ.284 கோடி

இதேபோல மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் ஆகியோர் தலைமையிலும் அமர்வுகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 468 அமர்வுகள் அமைக்கப்பட்டு, சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 86,638 வழக்குகள் இரு தரப்பு சம்மதத்துடன் சுமுக முடிவுக்கு வந்துள்ளன.

இதன்மூலம், வழக்கு தொடர்ந்தோருக்கு ரூ.283 கோடியே 88 லட்சத்து 35 ஆயிரத்து 155 நஷ்ட ஈடாக கிடைத்துள்ளது.

இவ்வாறு அவ்வாறு கூறினார்.