மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர் + "||" + 3 students drown in sea while swimming in Marina

சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர்

சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர்
சென்னை மெரினாவில் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கினர். தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை,

மெரினாவில் கடலில் குளித்து இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் அதனை மீறும் விதமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. மெரினாவில் கடலில் மூழ்கி இளைஞர்களும், மாணவர்களும் உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. விடுமுறை நாளான இன்று மெரினா கடற்கரையில் மேலும் ஒரு அசம்பாவித சம்பவம் நடைபெற்றுள்ளது. கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் பரத், ஜெய்கீர்த்தி, தினேஷ் ஆகியோர் நீரில் மூழ்கினர். 

கடலில் மூழ்கிய மாணவர்களில் 3 பேரில், மீட்கப்பட்ட  தினேஷ் என்ற மாணவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். பரத், ஜெய்கீர்த்தி என்ற இரண்டு மாணவர்களை கடலில் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.