மாநில செய்திகள்

ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு + "||" + Place names Change in Tamil: Minister Pandiarajan announced Dr. Ramadoss compliment

ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு

ஊர் பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு
ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்பு போன்றே ஆங்கிலத்தில் மாற்றப்படும் என்று அறிவித்த அமைச்சர் பாண்டியராஜன் நடவடிக்கைக்கு டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜனுக்கு பாராட்டு

தமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றம் செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டில் உள்ள ஊரின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் மாற்றப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருப்பது நல்ல நடவடிக்கை. பாராட்டத்தக்கது. இந்த மாற்றங்கள் பெரிதல்ல. தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான சட்டம் என்னவானது?. அதை உடனே நிறைவேற்றி நடைமுறைப்படுத்துங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பசுமைத் தாயகம் பங்கேற்பு

அதைபோல், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:–

காலநிலை மாற்ற பேரழிவுகளை தடுக்கவும், அதனால் அதிகரித்துவரும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கவும் உறுதியான விதிமுறைகளை உருவாக்குவதற்காக போலந்து நாட்டில் கூடியுள்ள ஐ.நா. காலநிலை மாநாட்டில், என்னால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் குழுவினர் பங்கேற்கின்றனர்.

ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமுதாயமும் போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம். ‘அடுத்து வரும் 10 ஆண்டுகளில் என்ன செய்யப்போகிறோம் என்பது தான், இனி இந்த பூமியில் வாழப்போகும் பல நூறு தலைமுறையினரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும்’ என்று ஐ.நா. அறிவியலாளர்கள் குழு அறிவித்தது. இத்தகைய முக்கியமான சூழலில் நடைபெறும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் உலக நாடுகள் உறுதியான முடிவுகளை மேற்கொண்டு காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியது இன்றியமையாததாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தங்க பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு
மலேசியாவில் சமீபத்தில் நடந்த பல நாடுகளின் வீரர்கள்- வீராங்கனைகள் பங்கேற்ற கராத்தே போட்டியில் இந்தியா சார்பில் இலக்கியா உள்பட 12 பேர் கலந்து கொண்டனர்.
2. அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார்: சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மீது தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கடும் குற்றச்சாட்டு, கோஷ்டி பூசல் வெடித்தது
அ.தி.மு.க.வை அழிக்கப்பார்க்கிறார் என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பணன் மீது தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கடும் குற்றச்சாட்டு கூறி உள்ளார். இதன் மூலம் அ.தி.மு.க.வின் கோஷ்டி பூசல் வெளியே வெடித்து உள்ளது.
3. அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்: ஸ்டாலின் பச்சை பொய் பேசி வாக்காளர்களை ஏமாற்ற பார்க்கிறார் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றும், ஸ்டாலின் பச்சை பொய் பேசி வாக்காளர்களை ஏமாற்ற பார்க்கிறார் எனவும் திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
4. தினகரனுக்கு எதிராக செயல்படுகிறார்: தங்கதமிழ்ச்செல்வன் தி.மு.க.வில் இணையப்போகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ சொல்கிறார்
தினகரனுடன் இருந்து கொண்டே அவருக்கு எதிராக செயல்படும் தங்கதமிழ்ச்செல்வன், தி.மு.க.வில் இணையப் போகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
5. அ.தி.மு.க. அரசை கலைப்பதற்காக ஸ்டாலின், தினகரன் அமைத்த ரகசிய கூட்டணி சிதைந்து போகும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
அ.தி.மு.க. அரசை கலைப்பதற்காக ஸ்டாலின், தினகரன் அமைத்துள்ள ரகசிய கூட்டணி சிதைந்து போகும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை