மாநில செய்திகள்

டெல்லியில் 13–ந் தேதி விழா கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார் + "||" + On the 13th day of the festival, Best female MP Award Venkaiah Naidu is presenting

டெல்லியில் 13–ந் தேதி விழா கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்

டெல்லியில் 13–ந் தேதி விழா கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது வெங்கையா நாயுடு வழங்குகிறார்
சிறந்த பெண் எம்.பி. விருதுக்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 13–ந் தேதி அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்குகிறார்.

சென்னை, 

சிறந்த பெண் எம்.பி. விருதுக்கு கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் 13–ந் தேதி அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருது வழங்குகிறார். விருது பெறும் கனிமொழிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சிறந்த பெண் எம்.பி.

லோக்மட் செய்தி நிறுவனம், நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்.பி.க்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி 2018–ம் ஆண்டுக்கான சிறந்த எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கு முன்னாள் மத்திய மந்திரி முரளி மனோகர் ஜோஷி தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் சிறந்த பெண் எம்.பி. விருதுக்கு தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.யை தேர்வு செய்துள்ளனர்.

வெங்கையா நாயுடு விருது வழங்குகிறார்

கனிமொழி நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகள் மகத்தான பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்ததற்காகவும் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் வருகிற 13–ந் தேதி மாலை 6 மணிக்கு விருது வழங்கும் விழா நடக்கிறது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு விருதுகளை வழங்குகிறார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சிறந்த பெண் எம்.பி. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தனது சகோதரி கனிமொழிக்கு தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

2018–ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும் கனிமொழி எம்.பி.க்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது. அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.